இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

54

லால்குடி கோபாலகிருஷ்ணன்

பொதுவாக, பதினோறாம் வீடு திருப்தி, நிறைவு போன்ற சாதக மான பலன்களையே குறிக்கும். ஆனாலும் சந்திரன் தன் வீட்டிற்குப் பதினோறாம் வீட்டில் உச்சமாயிருந் தாலும் பாதகம் செய்வார். சுக்கிரனுடைய வீட்டில் இருப்பதால் சந்திரன் சண்டாள யோகத்தை உருவாக்கு வார். சந்திரன் சண்டாளனாயும் பிரகாசிக்கிறான். கடகத்திற்கு ரிஷபம் பாதக ஸ்தானமாகிறது. கால புருஷனின் லக்னமாகிய மேஷத் திற்கு கடகம் நான்காம் பாவமாவ தால், மனம் மற்றும் கல்வியைக் குறிக்கும். மனம் முழுத் திருப்தி யடைந்தால் விரக்தி யுண்டாகும். கல்வியில் முழுத் திருப்தியடைந்தால் முன்னேற்றம் தடைப்படும். கடக லக்னமும், ரிஷப ராசியும் உள்ளவர்களுக்கு கல்வியால் அந்தஸ்து கிடைக்குமே யல்லாமல், செல்வம் கிடைப்பது கடினம். ஒரு பாவாதிபதி எந்த பாவத்தில் அமர்ந்தால் நல்லபலன் உண்டாகும் என்பதை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

g

""எம்பிரானே! ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா போன்றவற்றை சாத் திரங்களைக் கற்றறியாத எளி யோரும் உணருமாறு விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை கௌரி, திருவன்னியூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு அக்னிபுரீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

கபாலீஸ்வரர் உரைத்தது- ""எல்லா பொருளும் வீரனுக்கு ஆயுதமாகவே தெரியும். சிற்பி, கல்லை சிலையாகவே காண்பான். குயவனுக்கு“மண்ணெல்லாம் மண்பாண்டமே. ஞானியோ உயிர்களை ஆன்மாகவே உணர்வான். உண்மையான சுய மனமே ஆன்மா. உடலின் உணர்வுநிலை மனமாவதுபோல, உயிரின் உணர்வு நிலையே ஆன்மா. அது செயலிலின் அறிவாற்றல். குடத்து நீரில் காணும் சந்திரனின் பிரதிபலிலிப்பாகவே அமையும். குடம் உடைய நீர் சிதறும். அதனால் சந்திரனின் ஒளி காணாமல் போகும். அதையே மரணமென்பார். மனுஷ்ய கதி (மனிதர்கள்), தேவ கதி (உயர்நிலை), திர்யஞ்ச கதி (விலங்கு), நரதர் கதி (அசுரர்) எனும் நான்கு கதிகளில் ஆன்மா இயங்கும். கடல் நீரும், கரையை நோக்கி வரும் அதன் அலைகளும் வெவ் வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றே. அலை கள் மறுபடியும் பிரம்ம மாகிய கடலிலில் கலக்கும். ஜீவாத்மாவும் பரமாத் மாவும் ஒன்றே.''

Advertisment

""பிரகதீஸ்வரரே! "கடிப்ராந்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், விசாகம் முதல் பாதத்தில் குருவும், மூலம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் சூரியனும், திருவோணம் மூன்றாம் பாதத்தில் சனியும், சதயம் மூன்றாம் பாதத்தில் புதனும், ரேவதி நான்காம் பாதத்தில் செவ் வாயும், பூசம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று சிறுகுடி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மங்களநாதரை அன்னை மங்களாம்பிகை வினவினாள்.

திரிசடைநாதர் உரைத்தது- ""ஜகதீஸ் வரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் மோகனன் எனும் பெயருடன் பத்ரபுரி என்ற ஊரில் வாழ்ந்தான். இளம்வயதில் வெகுநாட்களாகப் பழகிய நண்பனின் மனைவிமீது மோகம் கொண்டான். அவளை வசியம் செய்து தன்வயப்படுத்தினான். இதையறிந்த அவன் நண்பன் மனம் வெதும்பி, தானே தன்னுயிரை நீத்தான். கூடா நட்பும், பொருந்தா காமமும் விளைவித்த மகாபாதகத்தால் பாவமூட்டை வலுத்தது. மோகனன் விபத்தில் மாண்டான். நண்பனுக்கு துரோகம் செய்ததாலும், பிறன்மனை நோக்கியதாலும் இரட்டை நரக தண்டனைப் பெற்றான். "தாமிஸ்ரம்', "அந்தகூபம்' ஆகிய இரண்டு நரகங்களில் பலகாலம் துன்புற்றபின் பூவுலகில் வந்து விழுந்தான். விதிவசத்தால் முற்பிறவியில் நண்பனின் மனைவியாய் இருந்த காமக்கிழத்தியையே இப்பிறவியில் மனைவியாய்ப் பெற்றான். மணவாழ்க்கையின் துவக்கத்திலேயே, அவன் மனைவி மனநோயாளியானாள்.

வாழ்க்கைத்தோட்டம் கரம்பாகி கள்ளி முளைத்தது. மனம் நொந் தான். ஆராத துயரால் ஆற்றில் விழுந்து மாண்டான். பிறன்மனை நோக்காத பேராண்மை இல்லாதவர்களின் அவதிக்குப் பரிகாரமில்லை என்பதே வாக்கு.''

(வளரும்)

செல்: 63819 58636

___________

நாடி ரகசியம்

Advertisment

1. மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும், மூலம் இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்துள்ள அமைப்பைப் பெற்ற ஜாதகர் ஆடை, அணிகலன் வியாபாரத்தில் புகழ் பெறுவார்.

2. மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்திருக்க, ஜாதகர் மருந்து தயார் செய்யும் தொழிலிலில் வெற்றியடைவார்.

3. மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியன், சனி, செவ்வாய் சேர்ந்திருக்க, ஜாதகரின் ஆயுள் குறையும்..

கேள்வி: லக்னம் என்பது சூரியனின் உதயாதி நாழிகையை அடிப்படையாகக்கொண்டு அமைவது. விம்சோத்தாரி தசை சந்திரனின் நட்சத்திர இருப்பைக்கொண்டு அமைவது. அவ்வாறிருக்க, இரண்டு வேறுபட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பலன் காண்பது ஏன்? தசா, புக்தி, அந்தர, சூட்சுமத் திலுள்ள கிரகங்களால் அறியப்படும் பலன் என்ன?

பதில்: லக்னம் விதியையும், மதியாகிய சந்திரன் மனதையும் குறிக்கும். அறுசுவையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு சுவையை விரும்புவதுபோல, ஒரே நிகழ்வு சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு வருத்தத்தையும் உண்டாக்கும். அதுபோல, ஜாதகத்தில் சுட்டிக்காட்டப்படும் ஒரு நிகழ்வு, ஜாதகரின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருமா அல்லது துன்பத்தைத் தருமா என்பதை அறியவே மனோ காரகனாகிய சந்திரனை அடிப்படையாகக்கொண்ட தசாமுறை கையாளப்படுகிறது. தசையின் அதிபதி ஒரு நிகழ்வையும், புக்திநாதர் அந்த நிகழ்வு நடைபெறுமா- எண்ணம் ஈடேறுமா என்பதையும், அந்தரநாதர் அந்த நிகழ்வின் தன்மையையும், சூட்சுமநாதர் அந்த நிகழ்வின் பின்விளைவுகளையும் எடுத்துரைப்பார்கள். ஒரே கிரகம் பாவத்திரிகோணங்களில் உபநட்சத்திர அதிபதியாக அமைவது வலிலிமையான பலனைத் தருமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.